பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.

இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2 replies on “பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிட பணி”
புலவர் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் அண்ணன் S.சத்தியகுமார் ஸ்டாலின்.BE., அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி கழக தலைவர் தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறந்த இந்த ஆட்சி மக்களின் திமுக ஒரு போதும் தனது மக்களை கைவிடாது
LikeLike
*புழல் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர்
LikeLike