திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் வல்லூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து விளையாட்டுப் போட்டி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வள்ளூர் அணியும் அத்திப்பட்டு அணியும் விளையாடினர்.
இறுதி வரையில் யாரும் கோல் அடிக்காததால் குலுக்கல் முறையில் வல்லூர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் அணியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தங்க நாணயத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் ஆகியோர் பரிசாக வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி தமிழரசன், கே.சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சென்னை: முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (ஜன.27) காணொலி வாயிலாக நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாளை திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக காணொலி மூலம் நடைபெற உள்ளது.
சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது.
இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும், தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் சந்திக்க தயாராகவே உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்பு பிரச்சனை தொடர்பாக திருநெல்வேலி பேருந்து நிலையம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றவரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய அப்போதைய திருநெல்வேலி DSP சேகருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமான மழை பொழிந்துள்ளது
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் மீஞ்சூர் அருகில் உள்ள குன்னம்மஞ்சேரியில் கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.
Over the years, software developers have used diverse coding languages to create quality websites. However, Python is one of the languages that contributed in quickly adapting to changes in technology and in building strong and responsive websites. This has influenced software developers to use python for a number of applications that includes General AI-based application, Machine Learning, NLP and Neural Networks. Within a short span of time, Python has gained popularity and developers have acknowledged the many significant advantages that endorse Python for web developers.
Let’s get introduced to Python:
Python is an Interpreted high-level language which can be treated in an object oriented, sequential or a procedural manner. It also provides high level built-in data structures that are merged with dynamic typing and dynamic binding semantics that make it very attractive for web application development
Python allows you to build web applications dynamically, it’s a very stable language and it also grants ease to build multi-protocol networks applications. The fact of Python being flexible, easy to use, and its quick processing are few reasons to mention its worth in web development.
What is Web Development:
Web development is nothing but a task of developing websites that can be hosted by the internet. It varies from single page to complex websites. For example,gmail.com, twitter.com etc.Typically, web development includes a Frontend and a Backend. The Frontend interacts with the user and the Backend is usually hidden from the regular users which contains all the business logic and interacts with a database. Python is used as a Backend language in web development and it is usually combined with some other Frontend languages to build the whole website.
Striking features of Python to build a world class web app:
1. Easy to learn, read and clean code structure.
Python relies on common expressions and whitepaper allows you to write less code. It has an easy readability and understandable nature which makes python a relatively easy language which anyone can explore to make changes in a solution.
2. Excellent for building prototypes:
As prototypes are necessary for idea recognition, it helps clients and developers know the exact flow of the project. If you are a startup looking to raise funds or promoting services through it, you have an advantage here. All you have to do is just spend a small time and amount to build a prototype.
3. Rich Ecosystem and Libraries:
Python provides a number of libraries for web development, some of the important ones are CherryPy, Django, WEB2PY, Pyramid, Turbo Gears and Flask. Among these Django is truly the best python library for web development compared to any other libraries. It’s written purely in Python and it’s fast. You can create websites within a matter of a few hours. It’s fully loaded with all the required tools to create websites and it’s very secure. Be it Youtube, Dropbox, Quora, Google, Bitly, Instagram. All these internet giants rely on Django.
You can access much pre-written code which helps you streamline your application development time.
4. Most preferred for Machine Learning and other advanced solutions.
Since this is an advanced era, in order to cater to the human needs technology is evolving hand in hand with industries. Due to Python’s popularity and striking features, scientists integrate the powerful TensorFlow Library and make it an extraordinary platform to build complex machine learning solutions. find India’s best python web app development.
5.Wide-spread-popularity:
Due to its widespread popularity, Python is continuously updated with new libraries and features. Also provides excellent documentation support and community support.
Python has been a trend in the industry for so many years and is still in the boom in the IT sector. Most importantly, it’s in budget and certainty paves way for rapid development for even more complex projects.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி, பழவேற்காடு பகுதி இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார் மேலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்
இதையடுத்து மழை வெள்ளத்தை துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்
சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கனமழையின் காரணமாக புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் இன்று காலை 11 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் திறந்துவிட உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுள் பிரதானமானது புழல் ஏரி .ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வினாடிக்கு ஆயிரத்து 487 கன அடி நீர்வரத்து ஏரிக்கு வர பெற்று வேகமாக நிரம்பி வருகிறது மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 2872 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது .
புழல்ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. ஏரியின் தற்போது நீர்மட்டம் 19.30 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று 11 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர். உபரி நீர் வெளியேறும் பகுதிகளான காவாங்கரை பாயசம்பாக்கம் சாமியார் மடம் முல்லை வாயில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய்த்துறையினர் சமுதாய கூடங்களையும் தனியார் மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்
சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்துள்ளது.
அரசாணை
இந்நிலையில் எம்பிசி பிரிவில் இருந்த வன்னியர் சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது இந்த சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு இது அரசாணையிலும் வெளியிடப்பட்டது.
நீதிபதிகள் அதிரடி
மேலும், வன்னியர் ஜாதியினருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. இந்த வழக்குளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா, உள்ளிட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.
13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.