Categories
Uncategorized

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பிப்ரவரி 19ல் வாக்குப்பதிவு, 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தேர்தலை சந்திக்கும் வகையில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சுமூகமாக நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் வெளியிட்டார். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 4ஆம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக கூட்டணி கட்சிகளும், தேமுதிக,நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் சந்திக்க தயாராகவே உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
journalist Uncategorized

நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு.. நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் துரை சந்திரசேகர் பொன்னேரி MLA

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் அதிகமான மழை பொழிந்துள்ளது

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நரிக்குறவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  அவர்கள்
மீஞ்சூர் அருகில் உள்ள  குன்னம்மஞ்சேரியில்  கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் சமூக மக்களுக்கு  நலத்திட்ட உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.

Categories
journalist

3வது நாளாக மழை வெள்ளத்தில் மக்களோடு மக்களாக நின்று நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடானது.

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்.


பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பொன்னேரி பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதி, பழவேற்காடு பகுதி   இன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்  ஆய்வு மேற்கொண்டார் மேலும் மக்களுக்கு நிவாரண உதவிகளை  வழங்கினார்

இதையடுத்து மழை வெள்ளத்தை துரிதமாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

Categories
journalist

சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரி நீர் திறக்கப்படவுள்ளது.

சென்னை அடுத்த புழல் ஏரியில் இருந்து காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனமழையின் காரணமாக புழல் ஏரி தனது முழு கொள்ளளவை நெருங்கியதால் ஏரியின் பாதுகாப்பை கருதி வினாடிக்கு 500 கன அடி வீதம் இன்று காலை 11 மணி அளவில் பொதுப்பணித்துறையினர் திறந்துவிட உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுள் பிரதானமானது புழல் ஏரி .ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் வினாடிக்கு ஆயிரத்து 487 கன அடி நீர்வரத்து ஏரிக்கு வர பெற்று வேகமாக நிரம்பி வருகிறது மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடியில் தற்போது 2872 மில்லியன் கன அடி கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது .

புழல்ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. ஏரியின் தற்போது நீர்மட்டம் 19.30 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று 11 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்துள்ளனர். உபரி நீர் வெளியேறும் பகுதிகளான காவாங்கரை பாயசம்பாக்கம் சாமியார் மடம் முல்லை வாயில் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வருவாய்த்துறையினர் சமுதாய கூடங்களையும் தனியார் மண்டபங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்

Categories
journalist

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டிட பணி

பொன்னேரியில் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

கட்டிடம் சேதமடைந்து வருவதாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க ஏற்கெனவே தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொன்னேரி அருகே வேண்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே புதிதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

13 ஆயிரம் சதுர அடியில் சுமார் ரூ.3.07 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார்.

இப்பணியை, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Categories
journalist

பழவேற்காட்டில் பாரம்பரிய மீன் உணவு விருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி பழவேற்காடு பகுதி மகளிர் குழு & மீனவ மக்கள் இனைந்து நடத்திய கடல் சார்ந்த மீன்வகை உணவு விருந்தளிப்பு விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ திரு. துரை சந்திரசேகர் அவர்கள் முன்னினையில்

திருவள்ளூர்  எம்.பி DR. K.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் தென் சென்னை எம்.பி திருமதி.Dr.தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Categories
journalist

திமுக அபார வெற்றி

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று 911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி. ருக்மணி ரவிச்சந்திரன் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
பெற்றார்.

Categories
Uncategorized

மீஞ்சூரில் மாபெரும் மருத்துவ முகாம்

இன்று பொன்னேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர் MA.BL., MLA அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைமை மருத்துவர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories
journalist Uncategorized

பொன்னேரி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

செப்டம்பர் மாதம் 03 அன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் MA. BL, MLA அவர்களின் முயற்சியில் உங்கள் தொகுதியின் முதல்வர்  திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொன்னேரி வட்டாச்சியார் அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.

Design a site like this with WordPress.com
Get started