Categories
Uncategorized

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கால்பந்து போட்டியில் வென்றவர்களுக்கு புல்லட் பைக் பரிசு – பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் வழங்கினார்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் வல்லூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்து விளையாட்டுப் போட்டி மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது
இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வள்ளூர் அணியும் அத்திப்பட்டு அணியும் விளையாடினர்.

இறுதி வரையில் யாரும் கோல் அடிக்காததால் குலுக்கல் முறையில் வல்லூர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பிலான இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் அணியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தங்க நாணயத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சங்கர் ஆகியோர் பரிசாக வழங்கினர்.

இந்நிகழ்ச்சியின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி தமிழரசன், கே.சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Design a site like this with WordPress.com
Get started