Categories
journalist

காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெற்று வருகிறது: பாஜகவினர் தங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள்: செயல் வீரர் கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேச்சு

வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற செயல் வீரர் கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பேச்சு.

தேசம் முழுவதிலும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம் திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலுப்பெற்று வருகிறது எனவும் உங்களுடன் பாஜகவினர் போட்டி போட்டுக் கொண்டு சில நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்து நடத்தி வருகின்றனர் எனவும் பாஜகவினர் தங்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய பொன்னேரி (காங்கிரஸ்) சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியினருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு எதிர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என ஏளனம் செய்தனர், ஆனால் நான் வெற்றி பெற்று இப்பொழுது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறேன் வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வலுவான கட்சியாக உருவெடுக்கும் என தெரிவித்த அவர் வருகின்ற தேர்தலில் பெருவாரியான இடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பெண்களாக இருக்கக்கூடும் எனவும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியின் கௌரவத்தை பாதுகாப்போம் என அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சதாசிவ லிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மற்றும் பொன்னேரி நகர நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Categories
Uncategorized

புழல் ஏரியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் எரிகளில் ஒன்றான புழல்ஏரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழக முதல்வராக ஸ்டாலின் ஏரியை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், ஏரி, குளம், கண்மாய்கள், கால்வாய்கள் தூரவாரப்பட்டு வருகிறது. மேலும், மழையின்போது, அணைகள் ஏரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை சுற்றி உள்ள நீர்நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, இன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல் செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளை நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

புழல் ஏரியில் 18.18 அடிக்கு நீா் உள்ளது. புழல் ஏரியில் நீர் இருப்பு 2,772 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 2,789 மி.கன அடி நீர் உள்ளது.

இன்று காலை தலைமைச்செயலகத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் செங்குன்றம் அருகே உள்ள புழல் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.  அணையின் உறுதித்தன்மை, நீர் இருப்பு  குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததுடன், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் கேட்டார். நீர் இருப்பு, கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுகளின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நீர் வழிப்பாதையில் உள்ள ஆகாய தாமரை அகற்றவும் கரையை பலப்படுத்தவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

22 ஆண்டுகளுக்கு பின் புழல் ஏரியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆய்வின் போது அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் இதில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் சங்கர் புழல் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், புழல் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி. தங்கமணி திருமால், ஊராட்சி செயலாளர் திரு.ஸ்டாலின், சத்தியகுமார் ஸ்டாலின் புழல் ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் அரசு அதிகரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்கிறார்.

Categories
journalist

பழவேற்காட்டில் பாரம்பரிய மீன் உணவு விருந்து

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதி பழவேற்காடு பகுதி மகளிர் குழு & மீனவ மக்கள் இனைந்து நடத்திய கடல் சார்ந்த மீன்வகை உணவு விருந்தளிப்பு விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ திரு. துரை சந்திரசேகர் அவர்கள் முன்னினையில்

திருவள்ளூர்  எம்.பி DR. K.ஜெயக்குமார் அவர்களும் மற்றும் தென் சென்னை எம்.பி திருமதி.Dr.தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Categories
journalist

திமுக அபார வெற்றி

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 1015 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 201 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி 18வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மாலதி மகேந்திரன் 1894 வாக்குகள் பெற்று 911 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திருமதி. ருக்மணி ரவிச்சந்திரன் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்
பெற்றார்.

Categories
Uncategorized

மீஞ்சூரில் மாபெரும் மருத்துவ முகாம்

இன்று பொன்னேரி சட்டமன்ற தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியில் மாபெரும் மருத்துவ முகாம் மாண்புமிகு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர் MA.BL., MLA அவர்கள் துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் தலைமை மருத்துவர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Categories
journalist

இன்று தேர்தல் முடிவு

தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால் அந்த நேரத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இரண்டு இடங்களில் இன்று (09/10/2021) இடைத்தேர்தல் நடைபெற்றது. 

நல்லூர் ஊராட்சியில் 15வது ஒன்றியக் கவுன்சிலருக்கும், பாடியநல்லூர் ஊராட்சியில் 5 வார்டுகள் உள்ளடங்கிய 18வது ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும் இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.


இந்த 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையானது, இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

Categories
journalist Uncategorized

திருவள்ளூரில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பிரியங்கா காந்தி கைதை கண்டித்து

08-10-2021 அன்று ,திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக
மாபெரும் கண்டன பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் நடைபெற்றது 

இந்தியாவின் அன்பு மகள் “திருமதி.பிரியங்கா காந்தி” அவர்களை பாஜகவின் காட்டுமிராண்டி அரசு அயோக்கியத்தனமாக, அத்துமீறி கைது செய்ததை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர், டாக்டர்.K.ஜெயக்குமார் எம்.பி., அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி, மாநில செயலாளர்    திரு. துரைசந்திரசேகர் MA.,B.L., MLA., அவர்கள்  கண்டன உரையாற்றினார்.

இக்கூட்டத்தில்,
திரு.T.L.சதாசிவலிங்கம், MA.B.L.,மாநில து.தலைவர்
திரு.D.ரமேஷ் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
மற்றும் திரு.A.G.சிதம்பரம் MA.B.L., திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Categories
journalist Uncategorized

பொன்னேரி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்

செப்டம்பர் மாதம் 03 அன்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் MA. BL, MLA அவர்களின் முயற்சியில் உங்கள் தொகுதியின் முதல்வர்  திட்டத்தின் கீழ் பொன்னேரி வட்டம் சோழவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதில் சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் பொன்னேரி வட்டாச்சியார் அவர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொண்டனர்.

Categories
Uncategorized

The Journey Begins

Thanks for joining me!

Good company in a journey makes the way seem shorter. — Izaak Walton

post

Design a site like this with WordPress.com
Get started